Other News

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் இன்று நடைபெறவிருந்த திருமணம், எதிர்பாராத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள மந்தனாவின் பண்ணை வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, அவரது தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் சாங்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் ஸ்மிருதி மந்தனா குடும்பத்துடன் மருத்துவமனைக்கு விரைந்தார். தற்போது அவரது தந்தையின் […]

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பணகுடி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மேய்ச்சல் நில உரிமையை நிலைநாட்ட நடத்தவிருந்த போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்தை அதிரடியாக வெளிப்படுத்தியுள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “பணகுடி மேய்ச்சல் நிலப்பகுதியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு சொந்தமான நிலம் இருக்கிறது. நான் அங்கு சென்றால் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்தினாலேயே காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது” என்று குற்றம் […]

5 கிலோகிராம் கொக்கெயினுடன் மலேசியப் பிரஜை கைது

5 கிலோகிராம் கொக்கெயினுடன் மலேசியப் பிரஜை கைது

சுமார் 5 கிலோகிராம் கொக்கெயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக 10 கிலோகிராம் போதைப்பொருள் என தெரிவிக்கப்பட்டது. எனினும் 5 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் பெறுமதி சுமார் 250 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அபுதாபியில் இருந்து வந்த […]

ஜேவிபியின் பொதுச் செயலாளருக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

ஜேவிபியின் பொதுச் செயலாளருக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராக லண்டனில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. லண்டன், வெம்பிளியில் புலம் பெயர் தமிழர் அமைப்பு ஒன்றினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி லண்டனுக்கு சென்ற ரில்வின் சில்வா, இன்று பிற்பகலில், லண்டன் – அல்பேட்டன் பகுதியில் உள்ள பாடசாலையில் புலம்பெயர் இலங்கையர்களுடன் சந்திப்பொன்றை நடத்தினார். அதற்காக அவர் பயணித்த வாகனத்தை மறித்தே புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். திருகோணமலையில் […]

கனடாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்

கனடாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்

கனடா தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்தும் புதிய முயற்சியாக பில் சி-3 எனும் சட்டமூலத்தை முன்வைத்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டில் பிறந்த ஆயிரக்கணக்கானோர் பயன் பெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சட்டமூலம் நீண்டகாலமாக நிலவிய குடியுரிமை பிரச்சினைகளை சரிசெய்கிறது என கனடாவின் குடியேற்ற அமைச்சர் லீனா மெட்லெஜ் டயாப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான குடும்பங்களுக்கு இது நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய […]

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்…

பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக-ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, நிதிஷ் குமார் சமீபத்தில் 10வது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவருடன் பதவியேற்ற 26 அமைச்சர்களில் 18 பேருக்கு இன்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. இந்த இலாகா ஒதுக்கீட்டில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது: கடந்த 20 ஆண்டுகளாக முதலமைச்சர் நிதிஷ் குமார் தம்வசம் வைத்திருந்த உள்துறை இலாகா, முதன்முறையாக கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த உள்துறையை, […]

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; நான் முக்கிய புள்ளி” எனக் கூறி, தனது திமுக பதவியை வைத்து கொண்டு இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக செய்திகள் […]

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க எவருக்கும் இடமளியேன்! - ஜனாதிபதி உறுதி

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க எவருக்கும் இடமளியேன்! – ஜனாதிபதி உறுதி

ஒருபுறத்தில் இனவாதத்தையும் மறுபுறத்தில் மதவாதத்தையும் தூண்டிக் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க எந்தத் தரப்பினருக்கும் இடமளிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருக்கும் இலங்கையர் தினத்துக்காகத் தற்போது திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று பிற்பகல் நடத்திய கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற […]

தமிழ், முஸ்லிம் எம்.பிக்களுடன் அநுர சந்திப்பு

தமிழ், முஸ்லிம் எம்.பிக்களுடன் அநுர சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று சந்திப்பு நடத்தியுள்ளார். இது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது முகநூலில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். “இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பித்து, ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம் பெற்றது. இனவாதத்தை ஒழிக்க, “இலங்கையர் தினத்தை” நடத்த, ஜனாதிபதி அநுர, எம்மை அழைத்து, எமது ஒத்துழைப்புக்களைக் கோரினார். எனது பதில் உரையில் நான் […]

சஜித் பலத்தைக் காட்டும் வரை நாமலே எதிர்க்கட்சித் தலைவர் – மனோ கருத்து

சஜித் பலத்தைக் காட்டும் வரை நாமலே எதிர்க்கட்சித் தலைவர் – மனோ கருத்து

“எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ, இப்படி ஒரு கூட்டத்தை, வெளியே கூட்டிக் காட்டும் வரை, நாட்டிலே நாமல் ராஜபக்ஷதான் எதிர்க்கட்சித் தலைவர்.” இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார். அநுர அரசுக்கு எதிராக நுகேகொடையில் நேற்று நடைபெற்ற பேரணி தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மனோவின் முகநூல் பதிவு வருமாறு:- “நிகழ்வு […]

கடுகண்ணாவ அனர்த்தம் - பலி எண்ணிக்கை உயர்வு

கடுகண்ணாவ அனர்த்தம் – பலி எண்ணிக்கை உயர்வு

கடுகண்ணாவ அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. முன்னதாக, கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்தது. மண்மேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. ஏலவே இருவர் உடலங்களாக மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இருவரும் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டு மாவனெல்ல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை […]

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட ரணில்

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட ரணில்

இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின் திருமணத்துக்காக ரணில் விக்ரமசிங்கவும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்தியா சென்றுள்ளனர். இந்நிலையில் தம்பதியினராக இருவரும் இன்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளனர்.

17 நிறுவனங்களுக்கு தடை - ட்ரம்ப் அதிரடி

17 நிறுவனங்களுக்கு தடை – ட்ரம்ப் அதிரடி

ஈரான் நாட்டு பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டமையால் இந்தியாவைச் சோ்ந்த சில நிறுவனங்கள், நபர்களின் நிதிச் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. ஈரான் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வருவாய் கிடைக்கச் செய்வது அந்நாட்டு பிராந்திய பயங்கரவாதத்தை ஊக்குவித்து அமெரிக்காவுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், அமெரிக்க நிதியமைச்சு பிறப்பித்த உத்தரவில், ‘ஈரான் பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட […]

கூட்டுறவுத் தேர்தல்களின் தோல்வியாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு அச்சம் - ஹர்ஷ டி சில்வா

கூட்டுறவுத் தேர்தல்களின் தோல்வியாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு அச்சம் – ஹர்ஷ டி சில்வா

“கூட்டுறவுத் தேர்தல்களில் தோல்வி ஏற்படுவதால், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அஞ்சுகின்றது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சட்டம் இயற்றிக் கொடுப்பதற்கு நாடாளுமன்றம் தயாராகவே உள்ளது. பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்தலாம். ஆனால், கூட்டுறவுத்தேர்தல்களில் தோல்வி ஏற்படுவதால், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு […]

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர இன்று காலமானார்!

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர இன்று காலமானார்!

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாகக் காலமானார். நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும்போது அவருக்கு 62 வயதாகும். இவர் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். அத்துடன், அவர் அமைச்சுச் செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் பல அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகள் உட்படப் பல பதவிகளை வகித்துள்ளார்.

உண்மையில் நான் ஒரு ஜனநாயகவாதி – பொன்சேகா

உண்மையில் நான் ஒரு ஜனநாயகவாதி – பொன்சேகா

“நான் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்தாலும் உண்மையில் நான் ஒரு ஜனநாயகவாதி. நான் எப்போதும் ஜனநாயகத்தின் பிரகாரமே செயற்பட்டு வருகின்றேன்.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். சரத் பொன்சேகா ஒரு சர்வாதிகாரி என்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் தெரிவித்துள்ள கருத்துக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், “என்னைச் சர்வாதிகாரி என்றும், நான் தலைவரானால் சர்வாதிகாரப் போக்கே […]