ஹோர்முஸ் நீரிணையில் மற்றொரு கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் இரண்டாவது “குற்றச் செயலில் ஈடுபட்ட கப்பல்” மீது தாக்குதல் நடத்தி அதனை தடுத்து நிறுத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை அறிவித்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான “ஆக்கிரமிப்புகள்” நீடித்தால், அதற்குப் பதிலடியாக “மிகவும் மோசமான” விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.