தூத்துக்குடியில் மடத்தூர்-சோரீஸ்புரம் ரோட்டில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் லாரி புக்கிங் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள அறையில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ், சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் அங்கிருந்து 3.8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக தூத்துக்குடி வண்ணார் 3வது தெருவைச் சேர்ந்த ஆறுமுகசாமி மகன் ஹரிகிருஷ்ணன்(எ) மண்ணென்னை ஹரி […]
Author: Arul
விவசாயப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்தார் டிரம்ப்
அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2-வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை விதித்து வருகிறார். இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கர்கள் அதிகம் பயன்படுத்தும் மாட்டிறைச்சி, காபி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்தது. இதனால், மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். […]
உருவகேலி பற்றி கயாடு லோஹர் பளீச்
தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் கயாடு லோஹர். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அதர்வா முரளியுடன் ‘இதயம் முரளி’, ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ‘இம்மார்ட்டல்’, மற்றும் சிம்புவின் 49வது படத்தில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு என்று பிசியாக நடித்து வருகின்றார் கயாடு லோஹர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கயாடு லோஹரிடம் நடிகைகளுக்கு ஏற்படும் உருவக் கேலி […]
திவாகரின் பிரிவை தாங்கமுடியாமல் கதறும் பார்வதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 9 தற்பொழுது புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த வார ஏவிக்சனில், கனியும், திவாகரும் வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன இந்நிலையில், தற்பொழுது வெளியான ப்ரோமோவில் திவாகர் வெளியேறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நிகழ்ச்சியின் காட்சியில், திவாகர் வெளியேறியதை தாங்க முடியாத VJ பார்வதி கண்ணீருடன், “நீங்க இல்லாமல் நான் என்ன செய்யப்போறேனோ..? சண்டை போடுறெண்டாலும் இனி […]
யாழ் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை (நவ 15) இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அறுகம்பே பாலியல் அத்துமீறல் முயற்சி: சந்தேகநபரைப் பிடிக்கப் பொதுமக்களின் உதவி கோரல்
கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகநபரைத் தேடிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸாரின் வேண்டுகோள் சம்பவம் சம்பந்தமாக ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாகக் கீழ்வரும் இலக்கங்கள் ஊடாகப் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்: பொத்துவில் பொலிஸ் நிலையம்: 063 […]
அம்பாறையில் மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயதுடைய மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தை ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரினால் சனிக்கிழமை (நவம்பர் 15) மாலை பெரிய நீலாவணைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமையப் பொலிஸார் சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்துள்ளனர். குடும்பத்தில் 3ஆவது பிள்ளையாக இருக்கும் இம்மாணவியை […]
இலங்கை – அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு: புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இன்று (நவம்பர் 14) இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding – MoU) ஒன்று பாதுகாப்பு அமைச்சில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் மொன்டானா தேசிய பாதுகாப்புப் படையின் நிறைவேற்றுத் தளபதி பிரிகேடியர் ட்ரெண்டன் கிப்சன். பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா. இந்த ஒப்பந்தம் மூலம், அமெரிக்க […]
இந்தியாவுடனான பாலம் தேவையற்றது இலங்கை தனித்து இருப்பதே நல்லதாம் – சந்திரசேகர்
இராமேஸ்வரம் – தலைமன்னார் தரைவழிப் பாதை எனும் எண்ணக்கரு தற்போதைக்குத் தேவையில்லை என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இலங்கை தீவாக தனித்து இருப்பதே எல்லாவற்றுக்கும் நன்மையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு தனியார் வானொலியொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார். எனவே, இராமேஸ்வரம் – தலைமன்னார் தரைவழிப் பாதையில் உடன்பாடில்லை என்றும் அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிட்டார். எனினும், இராமர் பாலத்தைச் சென்று மக்கள் பார்வையிடுவதற்கான […]
பலாலி சர்வதேச விமான நிலையம் நட்டத்தில் இயங்குகின்றது – சந்திரசேகர்
பருத்தித்துறை துறைமுகத்தை சீரமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் இலங்கை பேச்சு நடத்தியுள்ளது என்றும் அமைச்சர் சந்திரசேகர் தகவல் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம் தற்போது நட்டத்தில் இயங்குகின்றது என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பு தனியார் வானொலியொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பருத்தித்துறையில் உள்ள துறைமுகத்தை சீரமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுகளை நடத்தியுள்ளோம். அண்மையில் தொழில்நுட்பக் குழுவொன்றும் பருத்தித்துறைக்கு […]
பெக்கோ சமனின் மனைவி வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்
கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி ஷாதிகா லக்ஷானி பலத்த பாதுகாப்புடன் திங்கட்கிழமை (நவம்பர் 10) வவுனியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் வவுனியா பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவரால் வெளிநாடு செல்வதற்கான கடவுச்சீட்டு மோசடியாக வழங்கப்பட்டதாகக் காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியா நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் […]
10 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் !
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின் குழுவினர், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (நவம்பர் 11) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைமையகத்திற்கு வருகை தந்துள்ளனர். தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டம் குறித்து விவாதிக்கவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு வந்திருந்தனர். நாமல் […]
நாணய நிதியத்தின் பரிந்துரைகள் ஜனாதிபதி அநுரவால் நிராகரிப்பு! – வசந்த சமரசிங்க
2026ஆம் ஆண்டுக்கான பட்ஜட் தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் சிலவற்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிராகரித்தார் என்று அமைச்சர் வசந்த சமரசிங்க வெளிப்படுத்தியுள்ளார். பட்ஜட் தொடர்பான நாடாளுமன்ற விவாதங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்ததாவது:- “2026ஆம் ஆண்டுக்கான பட்ஜட்டைத் தயாரிக்கும்போது சில நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்தது. ஆனால், அவற்றில் பொருந்ததாத விடயங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிராகரித்தார். சொத்துக்கள் […]
பல கட்சி முறைமையை எதிரணிதான் நாசமாக்கியுள்ளது! – பிரதமர் ஹரிணி
“எதிரணிகளின் ஒன்றிணைவுதான் பல கட்சி முறைமைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மாறாக எதிரணியை ஆளுங்கட்சி குறிவைக்கவில்லை. அதற்கு எமக்கு நேரமும் கிடையாது.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், “பல கட்சி முறைமை மற்றும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என எதிரணி தரப்பில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கு எங்கு, எவ்வாறு அச்சுறுத்தல் […]
ஆளும் கட்சி காட்டுச் செடிகளாகி எதிரணி தங்கச் செடிகளாக மாறலாம் – சாமர சம்பத்
எதிர்க்கட்சியினர் காட்டுச் செடிகளாகவும், ஆளும் கட்சியினர் தங்கச் செடிகளாகவும் இப்போது காணப்பட்டாலும் இன்னும் சிறிது காலத்தில் ஆளும் கட்சியினர் காட்டுச் செடிகளாகி, எதிர்க்கட்சியினர் தங்கச் செடிகளாக மாறும் நிலை ஏற்படலாம் என்று புதிய ஜனநாயக முன்னணியின் எம்.பி சாமர சம்பத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே சாமர சம்பத் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “முழு […]
மட்டக்களப்பு, ஏறாவூரில் ஹெரோயினுடன் ஒருவர் கைது
மட்டக்களப்பு, ஏறாவூரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் 2,040 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவர், அதற்கு மேலதிகமாக வாயில் விழுங்கிய 28 பக்கற் கொண்ட ஹெரோயின் போதைப்பொருளை சிறைச்சாலை மலசல கூடத்தில் மலம் கழிக்க வைத்து மீட்டெடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது:- ஏறாவூர் றகுமானியா வீதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டு […]





