கனடா தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்தும் புதிய முயற்சியாக பில் சி-3 எனும் சட்டமூலத்தை முன்வைத்துள்ளது.
இதன் மூலம் வெளிநாட்டில் பிறந்த ஆயிரக்கணக்கானோர் பயன் பெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சட்டமூலம் நீண்டகாலமாக நிலவிய குடியுரிமை பிரச்சினைகளை சரிசெய்கிறது என கனடாவின் குடியேற்ற அமைச்சர் லீனா மெட்லெஜ் டயாப் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான குடும்பங்களுக்கு இது நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய சட்டத்தினூடாக, முன்னைய சட்டங்களால் குடியுரிமை நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கப்படும் எனவும் கனடாவின் குடியேற்ற அமைச்சர் கூறியுள்ளார்.





