ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராக லண்டனில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
லண்டன், வெம்பிளியில் புலம் பெயர் தமிழர் அமைப்பு ஒன்றினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி லண்டனுக்கு சென்ற ரில்வின் சில்வா, இன்று பிற்பகலில், லண்டன் – அல்பேட்டன் பகுதியில் உள்ள பாடசாலையில் புலம்பெயர் இலங்கையர்களுடன் சந்திப்பொன்றை நடத்தினார்.
அதற்காக அவர் பயணித்த வாகனத்தை மறித்தே புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
திருகோணமலையில் புதிய புத்தர் சிலை விடயம் மற்றும் சிங்கள குடியேற்றங்களை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
எனினும் லண்டன் காவல்துறையினர் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தி, ரில்வின் சில்வாவின் வாகனம் செல்வதற்கு வழியேற்படுத்திக் கொடுத்ததாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன





