ஒருபுறத்தில் இனவாதத்தையும் மறுபுறத்தில் மதவாதத்தையும் தூண்டிக் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க எந்தத் தரப்பினருக்கும் இடமளிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருக்கும் இலங்கையர் தினத்துக்காகத் தற்போது திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று பிற்பகல் நடத்திய கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற […]
முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள்
சஜித் பலத்தைக் காட்டும் வரை நாமலே எதிர்க்கட்சித் தலைவர் – மனோ கருத்து
“எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ, இப்படி ஒரு கூட்டத்தை, வெளியே கூட்டிக் காட்டும் வரை, நாட்டிலே நாமல் ராஜபக்ஷதான் எதிர்க்கட்சித் தலைவர்.” இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார். அநுர அரசுக்கு எதிராக நுகேகொடையில் நேற்று நடைபெற்ற பேரணி தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மனோவின் முகநூல் பதிவு வருமாறு:- “நிகழ்வு […]
கடுகண்ணாவ அனர்த்தம் – பலி எண்ணிக்கை உயர்வு
கடுகண்ணாவ அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. முன்னதாக, கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்தது. மண்மேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. ஏலவே இருவர் உடலங்களாக மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இருவரும் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டு மாவனெல்ல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை […]
கூட்டுறவுத் தேர்தல்களின் தோல்வியாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு அச்சம் – ஹர்ஷ டி சில்வா
“கூட்டுறவுத் தேர்தல்களில் தோல்வி ஏற்படுவதால், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அஞ்சுகின்றது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சட்டம் இயற்றிக் கொடுப்பதற்கு நாடாளுமன்றம் தயாராகவே உள்ளது. பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்தலாம். ஆனால், கூட்டுறவுத்தேர்தல்களில் தோல்வி ஏற்படுவதால், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு […]
தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர இன்று காலமானார்!
தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாகக் காலமானார். நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும்போது அவருக்கு 62 வயதாகும். இவர் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். அத்துடன், அவர் அமைச்சுச் செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் பல அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகள் உட்படப் பல பதவிகளை வகித்துள்ளார்.
உண்மையில் நான் ஒரு ஜனநாயகவாதி – பொன்சேகா
“நான் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்தாலும் உண்மையில் நான் ஒரு ஜனநாயகவாதி. நான் எப்போதும் ஜனநாயகத்தின் பிரகாரமே செயற்பட்டு வருகின்றேன்.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். சரத் பொன்சேகா ஒரு சர்வாதிகாரி என்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் தெரிவித்துள்ள கருத்துக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், “என்னைச் சர்வாதிகாரி என்றும், நான் தலைவரானால் சர்வாதிகாரப் போக்கே […]
பலாலி சர்வதேச விமான நிலையம் நட்டத்தில் இயங்குகின்றது – சந்திரசேகர்
பருத்தித்துறை துறைமுகத்தை சீரமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் இலங்கை பேச்சு நடத்தியுள்ளது என்றும் அமைச்சர் சந்திரசேகர் தகவல் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம் தற்போது நட்டத்தில் இயங்குகின்றது என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பு தனியார் வானொலியொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பருத்தித்துறையில் உள்ள துறைமுகத்தை சீரமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுகளை நடத்தியுள்ளோம். அண்மையில் தொழில்நுட்பக் குழுவொன்றும் பருத்தித்துறைக்கு […]





