இன்றைய ராசிபலன் 19.11.2021 | Today rasi palan 19.11.2021
இன்றைய ராசிபலன் 19.11.2021 | Today rasi palan 19.11.2021
மேஷம்
இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறப்புகளிடம் ஒற்றுமை குறையும். வீண் விரயங்களால் கையிருப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டின் தேவைகள் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிதுனம்
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எடுக்கும் காரியம் எளிதில் முடியும்.
சிம்மம்
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் ஆதரவு கிட்டும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.
கன்னி
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் மன உளைச்சல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியுடன் சுபகாரிய பேச்சுக்கள் சுமூகமாக முடியும்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோக ரீதியாக மன உளைச்சல், தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகி அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
தனுசு
இன்று குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப் படும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூக உறவு ஏற்படும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் குறையும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. உத்தியோக ரீதியான பயணங்களால் வருமானம் பெருகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.
கும்பம்
இன்று எதிர்பாராத வகையில் திடீர் பயணங்கள் ஏற்பட்டு அதன் மூலம் வீண் அலைச்சலும் உடல் அசதியும் தோன்றும். வெளி நபர்களுடன் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.
மீனம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். பெண்களுக்கு பணிச்சுமை குறையும்.