இன்றைய ராசிபலன் 18.11.2021 | Today rasi palan 18.11.2021
இன்றைய ராசிப்பலன் – 18.11.2021
மேஷம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன் கிட்டும்.
மிதுனம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ற உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று உங்களின் பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கப் பெறும்.
சிம்மம்
இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
கன்னி
இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
துலாம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களோடு ஒற்றுமையாக செயல்பட்டு நற்பலன் அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் ஆதாயங்கள் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும்.
மகரம்
இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனவருத்தங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத புதிய பொறுப்புகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைகூடும்.
மீனம்
இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் உண்டாகும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.