Today palan 12.01.2021 | இன்றைய ராசிபலன் 12.01.2021

Spread the love

Today palan 12.01.2021 | இன்றைய ராசிபலன் 12.01.2021

 

இன்றைய பஞ்சாங்கம்

12-01-2021, மார்கழி 28, செவ்வாய்க்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.23 வரை பின்பு அமாவாசை. மூலம் நட்சத்திரம் காலை 07.37 வரை பின்பு பூராடம் நட்சத்திரம் பின்இரவு 06.21 வரை பின்பு உத்திராடம். அமிர்தயோகம் காலை 07.37 வரை பின்பு சித்தயோகம் பின்இரவு 06.21 வரை பின்பு பிரபலாரிஷ்டயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சர்வ அமாவாசை. ஸ்ரீ அனுமந்த ஜெயந்தி.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் – 12.01.2021

மேஷம்

இன்று உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினை குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் தாமத பலனே ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும் போது கவனமுடன் இருப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

கடகம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.

சிம்மம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கன்னி

இன்று தொழில் ரீதியாக அலைச்சலும் மனக்குழப்பமும் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும்.

துலாம்

இன்று வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறைந்து லாபம் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். வெளியூர் பயணங்கள் மூலம் வெளிவட்டார நட்பு உண்டாகும். நினைத்தது நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

தனுசு

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். புதிய தொழில் தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபகாரியங்கள் கைகூடும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

கும்பம்

இன்று வீட்டு தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். பொன் பொருள் சேரும்.

மீனம்

இன்று இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் ரீதியான பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும்.

 

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001


Spread the love