சுமார் 5 கிலோகிராம் கொக்கெயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக 10 கிலோகிராம் போதைப்பொருள் என தெரிவிக்கப்பட்டது.
எனினும் 5 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் பெறுமதி சுமார் 250 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அபுதாபியில் இருந்து வந்த மலேசியப் பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.





