நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பணகுடி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மேய்ச்சல் நில உரிமையை நிலைநாட்ட நடத்தவிருந்த போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்தை அதிரடியாக வெளிப்படுத்தியுள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “பணகுடி மேய்ச்சல் நிலப்பகுதியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு சொந்தமான நிலம் இருக்கிறது. நான் அங்கு சென்றால் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்தினாலேயே காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது” என்று குற்றம் […]
தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாடு செய்திகள்
6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!
விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; நான் முக்கிய புள்ளி” எனக் கூறி, தனது திமுக பதவியை வைத்து கொண்டு இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக செய்திகள் […]
தூத்துக்குடியில் 3.8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
தூத்துக்குடியில் மடத்தூர்-சோரீஸ்புரம் ரோட்டில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் லாரி புக்கிங் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள அறையில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ், சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் அங்கிருந்து 3.8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக தூத்துக்குடி வண்ணார் 3வது தெருவைச் சேர்ந்த ஆறுமுகசாமி மகன் ஹரிகிருஷ்ணன்(எ) மண்ணென்னை ஹரி […]
சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சீமானுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் சீமான், பிறந்த பிரதேசமானாலும் சரி, தேர்ந்துகொண்ட திரைத்துறையானாலும் […]
தாயின் ஓரினச்சேர்க்கை நடத்தையால் சந்தேகம் – 6 மாதக் குழந்தை கொலையா?
ஓசூர் பகுதியில் ஆறு மாதக் குழந்தை ஒன்று தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத் திணறி இறந்ததாக முன்னர் தகவல் வெளியான நிலையில், குழந்தையின் தாயின் ஓரினச்சேர்க்கை நடத்தை காரணமாகக் குழந்தையின் தந்தை சந்தேகம் எழுப்பியதால், தற்போது காவல்துறையினர் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக, ஆறு மாத ஆண் குழந்தை ஒன்று தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத் திணறி இறந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் […]





