Author: Arul

சாணக்கியன் எம்.பியின் தந்தையார் காலமானார்.

சாணக்கியன் எம்.பியின் தந்தையார் காலமானார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையார் மருத்துவர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். அவரது பூதவுடல் நாளை சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின்னர் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் 19 வீதமாக குறைவு !

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் 19 வீதமாக குறைவு !

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் கடந்த ஆண்டை விடவும் இவ்வருடம் 19 வீதமளவில் குறைந்துள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்தார். நுகர்வோர் அடிக்கடி கொள்வனவு செய்யும் நாற்பது வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளே, இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன. இவற்றில், வீட்டுத் தேவைகளுக்கு பயன்படும் பொருட்களே அதிகம். இது குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த அமைச்சர்; நுகர்வோர் அடிக்கடி கொள்வனவு செய்யும் பொருட்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.இத்தகைய […]

நாட்டை நாசமாக்கிய தரப்புகள் நடத்தும் பேரணியில் பங்கேற்குமளவுக்கு நான் முட்டாளில்லை – சரத் பொன்சேகா !

நாட்டை நாசமாக்கிய தரப்புகள் இணைந்து நடத்தும் நுகேகொடை பேரணியில் பங்கேற்குமளவுக்கு, தாம் முட்டாளில்லையென முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிபீடமேறுவதற்கு இடமளிக்கக் கூடாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உட்பட மேலும் சில கட்சிகள் இணைந்து நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி,இந்த பேரணியை […]

2026 மார்ச் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை

டிஜிட்டல் பொருளாரத்தை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கு 25,500 மில்லியனுக்கும் அதிக முதலீட்டை பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்காக டிஜிட்டல் பொருளாதார பேரவை ஸ்தாபிக்கப்படும். 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும்.

முஸ்லிம் தாதியர்களின் ஹிஜாப் விவகாரத்தில் ஒருசிலர் பிரிவினை முயற்சிகள் ? – முஜிபுர் ரஹ்மான்

முஸ்லிம் தாதியர்களின் ஹிஜாப் விவகாரத்தை அடிப்படையாகக்கொண்டு ஒருசிலர் நாட்டுக்குள் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அரசாங்கம் அதற்கு இடமளிக்கக்கூடாது. அதேநேரம் முஸ்லிம் தாதியர்கள் ஹிஜாப் அணிந்து கடமையில் ஈடுபட முடியும் என்பதை அரசாங்கம் சுற்றுநிருபம் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். முஸ்லிம் தாதியர்கள் தலையை மறைத்து அணியும் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் […]

பசில் ராஜபக்ஷ மீது ரூ.1.03 பில்லியன் பொது நிதி முறைகேடு குற்றச்சாட்டு !

பசில் ராஜபக்ஷ மீது ரூ.1.03 பில்லியன் பொது நிதி முறைகேடு குற்றச்சாட்டு !

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ 2010 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் பொது நிதியில் ரூ. 1.03 பில்லியனுக்கும் அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் கமந்த துஷார, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மோசடி, ஊழல் மற்றும் […]

இன்றைய தங்க விலை நிலைவரம்

இன்றைய தங்க விலை நிலைவரம்

இன்று வியாழக்கிழமை (நவம்.06) கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 கிராம் தங்கம் (22 கரட்) – ரூ.36,537 1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ.292,300 1 கிராம் தங்கம் (24 கரட்) – ரூ.39,500 1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.316,000

புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு!

புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கில் குற்றவாளி நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பிரதிவாதிகள், தம்மை தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இம்மனு மீதான விசாரணையை நிறைவு செய்த உயர் நீதிமன்றம் தீர்ப்பினை காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது. பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (6) உயர்நீதிமன்றத்தில் நிறைவு செய்யப்பட்டது. பிரதம நீதியரசர் பிரீத்தி […]