Author: Arul

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம்

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை, 2026ஆம் ஆண்டை முன்னிட்டு சீனா-அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி 2024இல் அறிவிக்கப்பட்டிருந்த கலியம், ஜெர்மேனியம், அன்டிமனி மற்றும் சூப்பர்-ஹார்ட் பொருள்கள் மீதான ஏற்றுமதித் தடை 2025 நவம்பர் 9 முதல் 2026 நவம்பர் 27 வரை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இரட்டைப் பயன்பாட்டுக்குரிய […]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது குறித்துப் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவெடுப்போம்: ரெலோ அறிவிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது குறித்துப் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவெடுப்போம்: ரெலோ அறிவிப்பு!

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் (Tamil National Alliance – TNA) செயற்படுவது தொடர்பில், பங்காளிக் கட்சிகளுடன் பேசியே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) அறிவித்துள்ளது. ரெலோ கட்சியின் தலைமைக் குழுக் கூட்டம் நேற்று (நவம்பர் 9) வவுனியாவில் நடைபெற்ற நிலையில், அதன் நிறைவில் ஊடகங்களிடம் பேசிய கட்சியின் பேச்சாளர் கு. சுரேந்திரன் இந்த விடயத்தைத் தெரிவித்தார். தமது கட்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட […]

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை அதிகரித்துள்ளது. எனவே, அந்நிய செலாவணி ஓட்டங்களில் நிலைத்தன்மை இருப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜெயகொட தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொதுக் கருத்தரங்கில் 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த ஆண்டின் […]

இலங்கைப் பாடத்திட்டத்தில் ‘பொருத்தமற்ற பாலியல் கல்வித் திட்டம்’ - பேராயர் கர்தினால் ரஞ்சித் எச்சரிக்கை!

இலங்கைப் பாடத்திட்டத்தில் ‘பொருத்தமற்ற பாலியல் கல்வித் திட்டம்’ – பேராயர் கர்தினால் ரஞ்சித் எச்சரிக்கை!

இலங்கைப் பாடசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள “பொருத்தமற்ற பாலியல் கல்வித் திட்டம்” குறித்துக் கொழும்புப் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கடும் கவலையை வெளியிட்டுள்ளார். இது நாட்டின் கலாசார மற்றும் ஒழுக்க விழுமியங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மீரிகம–கிணதெனியப் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட புனித ஸ்டீபன் தேவாலயத்தை மீண்டும் திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் பேசினார். திட்டமிடப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் ஜனவரியில் தொடங்கப்படவுள்ள இந்த […]

சுவிஸ் தூதுவர் – ரில்வின் சில்வா சந்திப்பு!

சுவிஸ் தூதுவர் – ரில்வின் சில்வா சந்திப்பு!

ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் சந்தித்துப் பேசியுள்ளார். பத்தரமுல்ல,பெலவத்தையில் உள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அண்மையில் இலங்கை நாடாளுமன்றக் குழுவொன்று சுவிட்சர்லாந்துக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரக முதல்நிலைச் செயலர் ஜஸ்டின் பொய்லெட்டும் கலந்துகொண்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டு பட்ஜட்டில் மலையகத்துக்கான இரண்டு திட்டங்களும் வரவேற்கத்தக்கவை - செந்தில் தொண்டமான்

2026 ஆம் ஆண்டு பட்ஜட்டில் மலையகத்துக்கான இரண்டு திட்டங்களும் வரவேற்கத்தக்கவை – செந்தில் தொண்டமான்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மலையகத்துக்கான இரண்டு திட்டங்களும் வரவேற்கத்தக்கவை என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் 2025ஆம் ஆண்டு சமர்ப்பித்த வரவு – செலவுத் திட்டத்தில் மலையகத்துக்கு இந்திய அரசின் வீடமைப்புத் திட்டத்தைத் தவிர புதிதாக […]

மாவீரரை நினைவேந்த தமிழருக்கு முழுச் சுதந்திரம் உண்டு - அநுர

மாவீரரை நினைவேந்த தமிழருக்கு முழுச் சுதந்திரம் உண்டு – அநுர

“மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. இதை எவரும் மறுத்துரைக்க முடியாது. மாவீரர் துயிலும் இல்லங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.” இவ்வாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “போர்க் காலத்தில் படையினரால் கைப்பற்றப்பட்ட காணிகளைத் தற்போதைய அரசு விடுவித்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, மாவீரர் துயிலும் இல்லங்களில் […]

சாணக்கியன் எம்.பியின் தந்தையாரின் பூதவுடலுக்கு பலரும் நேரில் அஞ்சலி!

சாணக்கியன் எம்.பியின் தந்தையாரின் பூதவுடலுக்கு பலரும் நேரில் அஞ்சலி!

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் தந்தையாரின் பூதவுடலுக்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி வருகின்றனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையார் மருத்துவர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் நேற்றுமுன்தினம் காலமானார். அன்னாரின் பூதவுடல் நேற்று பிற்பகல் 2 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பூதவுடலுக்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பூதவுடல் இன்று மாலை 6 மணியளவில் […]

சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சீமானுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் சீமான், பிறந்த பிரதேசமானாலும் சரி, தேர்ந்துகொண்ட திரைத்துறையானாலும் […]

தாயின் ஓரினச்சேர்க்கை நடத்தையால் சந்தேகம் – 6 மாதக் குழந்தை கொலையா?

ஓசூர் பகுதியில் ஆறு மாதக் குழந்தை ஒன்று தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத் திணறி இறந்ததாக முன்னர் தகவல் வெளியான நிலையில், குழந்தையின் தாயின் ஓரினச்சேர்க்கை நடத்தை காரணமாகக் குழந்தையின் தந்தை சந்தேகம் எழுப்பியதால், தற்போது காவல்துறையினர் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக, ஆறு மாத ஆண் குழந்தை ஒன்று தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத் திணறி இறந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் […]

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் முச்சக்கரவண்டி விபத்து: 3 இளைஞர்கள் படுகாயம்!

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் முச்சக்கரவண்டி விபத்து: 3 இளைஞர்கள் படுகாயம்!

களுவாஞ்சிகுடி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்றிரவு (நவம்பர் 7) முச்சக்கரவண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் அதில் பயணித்த மாங்காட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு (நவ 7) மட்டக்களப்பு பகுதியிலிருந்து மாங்காடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியே வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தில் காயமடைந்த 3 பேரும் ஆரம்பத்தில் செட்டிப்பாளையம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். […]

இது சலுகைகள் இல்லாத, IMF எழுதிய வரவு செலவுத் திட்டம் : சஜித் கடுமையாக விமர்சனம்!

இது சலுகைகள் இல்லாத, IMF எழுதிய வரவு செலவுத் திட்டம் : சஜித் கடுமையாக விமர்சனம்!

இன்று (நவ 7) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது, மக்களுக்குச் சலுகைகள் இல்லாத, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வெறும் வரவு செலவுத் திட்டமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார். வரவு செலவுத் திட்ட உரை முடிந்த பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தைப் […]

ஜனாதிபதி நழுவல் போக்கினையே கடைப்பிடிக்கிறார் – ரவூப் ஹக்கீம்

ஜனாதிபதி நழுவல் போக்கினையே கடைப்பிடிக்கிறார் – ரவூப் ஹக்கீம்

மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுவதற்கான நழுவல் போக்கினையே ஜனாதிபதி முன்னெடுக்கிறார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (நவ 7) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தல் பற்றி ஜனாதிபதி பல விடயங்களைக் குறிப்பிட்டார். மாகாண சபைத் […]

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில் மழைக்கு வாய்ப்பு

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில் மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர் 8, 2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறியுள்ளது. ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த […]

மாகாண சபைத் தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு - அநுர

மாகாண சபைத் தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – அநுர

இலங்கையின் நிதி நிலைமை மீண்டும் பலவீனமடையும் என்று எவரும் இனி கனவு காணக் கூடாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன்போது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இம்முறை அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்கி வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார். அவர் தனது […]

சலுகைகள் இல்லாத பாதீடே முன்வைப்பு! – சஜித் கொதிப்பு

சலுகைகள் இல்லாத பாதீடே முன்வைப்பு! – சஜித் கொதிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசின் 2026 வரவு – செலவுத் திட்டமானது, மக்களுக்குச் சலுகைகள் இல்லாத சர்வதேச நாணய நிதியத்தின் வெறும் வரவு – செலவுத் திட்டமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் இன்று மாலை கருத்து வெளியிட்ட சஜித், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு:- “இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு […]