இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின் திருமணத்துக்காக ரணில் விக்ரமசிங்கவும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்தியா சென்றுள்ளனர்.
இந்நிலையில் தம்பதியினராக இருவரும் இன்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளனர்.





