இந்தியாவுடனான பாலம் தேவையற்றது இலங்கை தனித்து இருப்பதே நல்லதாம் – சந்திரசேகர்

இராமேஸ்வரம் – தலைமன்னார் தரைவழிப் பாதை எனும் எண்ணக்கரு தற்போதைக்குத் தேவையில்லை என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இலங்கை தீவாக தனித்து இருப்பதே எல்லாவற்றுக்கும் நன்மையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு தனியார் வானொலியொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார்.

எனவே, இராமேஸ்வரம் – தலைமன்னார் தரைவழிப் பாதையில் உடன்பாடில்லை என்றும் அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

எனினும், இராமர் பாலத்தைச் சென்று மக்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.