அமைச்சருக்கு களங்கம் விளைவிக்க சதி?

Spread the love

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவியின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில், சமூக ஊடகங்களில் பொய் மற்றும் புனையப்பட்ட தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அமைச்சரின் ஊடகச் செயலாளர் குணரத்ன விக்கிரமதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அடையாளம் காணப்பட்ட சமூக ஊடகச் செயற்பாட்டாளர் ஒருவரால் இந்தப் போலித் தகவல்கள் உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய அமைச்சர் புத்தசாசனத்தையோ அல்லது அதன் சொத்துக்களையோ அவமதிக்கும் வகையில் பல ஆதாரமற்ற போலித் தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இந்தத் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய் என்பதைப் பொறுப்புடன் தெரிவிப்பதாகவும், இதுபோன்ற போலித் தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love