கொரோனா – இத்தாலியில் வர்த்தகத்துக்குத் தடை!

Spread the love

கொரோனா – இத்தாலியில் வர்த்தகத்துக்குத் தடை!

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களைத் தவிர்த்து பிற பொருட்களுக்கான வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இத்தாலியில் 827 பேர் கோரோனாவால் பலியான நிலையில் 12,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை 700க்கும் அதிகமானவர்கள் வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இத்தாலியில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பொதுக் கூட்டங்களுக்கு தடை உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் தவிர்த்து பிற பொருட்களுக்கு வர்த்தகத் தடையை இத்தாலி அரசு விதித்துள்ளது.

இதுகுறித்து இத்தாலி பிரதமர் செப்பி கான்ட்டே கூறும்போது, “கரோனா வைரஸ் பரவலைத் தவிர்ப்பதற்கு படிப்படியாகச் செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம் என்றும், அதன்படி

இப்போது அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் (அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள்) மூட உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் மதுக்கடைகள், பார்கள், ஒட்டல்கள் ஆகியவற்றையும் மூட உத்தரவிடப்பட்டிருப்பதாக கூறிய அவர், வங்கிகள், தபால் நிலையங்களும் மூடப்படும் எனவும் கூறியுள்ளார்.


Spread the love