Bigg Boss Eviction: பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட்டாகும் இரண்டு பேர் யார்?
பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று இரண்டு பேர் வெளியேற போவதாக அறிவித்து உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் சற்று வித்தியாசமாக உள்ளது. எதை எடுத்தாலும் கண்டெண்ட் என போட்டியாளர்கள் பிளான் போட்டு ஆடுகிறார்கள். 4 ஆவது வாரத்தின் பரிந்துரைகள் மற்றும் எலிமினேஷன்கள் குறித்து பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
வழக்கத்திற்கு மாறாக இந்த வாரம் பிரதீப், யுகேந்திரன், வினுஷா, விக்ரம், விஷ்ணு, கூல் சுரேஷ், மணிச்சந்திரா, நிக்சன், ஜோவிகா, மாயா, அக்ஷயா, என மொத்தம் 11 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்று இருக்கிறார்கள்.
இந்த பட்டியலில் வழக்கம் போல் பிரதீப் முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவதாக நிக்சனும், மணி சந்திரா, ஜோவிகா அடுத்தடுத்த இடத்திலும் இருக்கிறார்கள்.
இறுதி பட்டியலில் வினுஷா, விக்ரா, அக்ஷயா ஆகியோர் பெயர் இருக்கிறது. இதில் இந்த வாரம் இரண்டு எவிக்ஷேன் இருக்கும் என சொல்லப்படுகிறது.
தற்போது விக்ரம் மற்றும் அக்ஷயா இருவர் தான் கடைசி இடத்தில் உள்ளார்களாம். அதனால் இவர்கள் இருவரும் டபுள் எவிக்ட்டாக அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.