“அப்பா மாதிரி பார்த்த ஒருத்தர் இப்படி பேசினால் உள்ளே குத்துது” – ஜாக்குலின்

Spread the love

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 47 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். பிக் பாஸ் வீட்டில் தற்போது ஆனந்தி, அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சாச்சனா, சத்யா, சௌந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் ரஞ்சித் சார்,நீங்க பண்ணது ரொம்ப பேடா இருக்குது என கமெண்ட் வந்தது. கேவலமா புடுங்கி வாங்கியிருக்கீங்க. கேமை கேமா விளையாடுங்க என்றார் சவுந்தர்யா. இதற்கிடையே ஜாக்குலின், அவரை நம்பவே நம்பாதீங்க. 60 நாளும் இந்த கேம் தான்டா விளையாடிக்கிட்டு இருக்கார் என்று அழுதார். உன்னை காயப்படுத்தினால் நீ சொல்லலாம் என ரஞ்சித் பதில் கொடுத்தார். அப்பா மாதிரி பார்த்த ஒருத்தர் இப்படி பேசினால் உள்ளே குத்துது சார் என கத்தினார் ஜாக்குலின். அதை பார்த்த ரஞ்சித்தோ, இந்தா புடிமா ஹார்ட்டு என தூக்கிப் போட்டுவிட்டு சென்றார்.


Spread the love