24 மணி நேரமும் ஸ்மார்ட் போனில் ‘வீடியோ கேம்’ விளையாடியதன் விளைவாக அந்த பெண்ணின் கண் குருடானது.

சீனாவில் ஷான்ஸி மாகாணத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ‘ஸ்மார்ட் செல்போனில் தொடர்ந்து ‘வீடியோ கேம்’ விளையாடிக் கொண்டிருந்தார். அதற்கு அடிமையான அவர் தொடர்ந்து 24 மணி நேரமும் அந்த விளையாட்டில் மூழ்கி கிடந்தார். இந்த நிலையில் அவரது வலது கண்ணில் பார்வை சிறிது சிறிதாக மங்கி கொண்டே வந்தது. எனவே நஞ்சாங் மாவட்ட ஆஸ்பத்திரியில் அவருக்கு கண் பரிசோதனை நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் வலது கண்ணில் பார்வை படிப்படியாக குறைந்து இறுதியில் முற்றிலும் பாதிக்கப்பட்டு குருடானது. கண்பார்வை பறிபோனது குறித்து டாக்டர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதுபோன்று நடப்பது மிகவும் அரிது என கருத்து தெரிவித்துள்ளனர். கண்ணுக்கு அதிக அளவு வேலை கொடுத்து நோக செய்ததின் விளைவே பார்வை பறிபோனதற்கு காரணம் என கூறியுள்ளனர்.