ஆஷிஷ் நெஹ்ரா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா அறிவித்துள்ளார்.
நவம்பர் 1ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் தனக்கு வாய்ப்பளிக்க அணி நிர்வாகத்திடம் நெஹ்ரா கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கு நிர்வாகமும் சம்மதித்துள்ளது.